Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியதால் அசாதாரண சூழல் நிலவி வருகிறது

கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியதால் அசாதாரண சூழல் நிலவி வருகிறது

By: vaithegi Tue, 04 July 2023 12:40:31 PM

கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியதால் அசாதாரண சூழல் நிலவி வருகிறது

கன்னியாகுமரி: திருவள்ளூர் சிலை, விவேகானந்தர் மண்டபம் செல்ல தற்காலிக தடை .... கன்னியாகுமரியில் திடீரென கடல் உள்வாங்கியதால் திருவள்ளூர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு போக்குவரத்து சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

கடல் உள்வாங்கியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் சிலை, விவேகானந்தர் மண்டபம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.இதையடுத்து இதுதொடர்பாக மறு அறிவிப்பு வரும் வரை தடை தொடரும் எனவும் கூறி உள்ளனர்.

kanyakumari,thiruvallur statue,vivekananda mandapam ,கன்னியாகுமரி,திருவள்ளூர் சிலை, விவேகானந்தர் மண்டபம்


உலக புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் முக்கியமான ஒன்று இந்தியாவில் தென்கோடியில் அமைந்துள்ள குமரியாகும். கடல் நடுவே அமைந்து உள்ள திருவள்ளூர் சிலை, விவேகானந்தர் மண்டபத்தை காண, உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாநில மக்கள் வந்து செல்வார்கள். எனவே இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் சுற்றுலா படகு சேவையும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று முதல் கன்னியாகுமரி கடல் பகுதியில் அசாதாரண சூழல் நிலவி கொண்டு வருகிறது. கடல் உள்வாங்கியுள்ளதாகவும், திடீரென அலைகள் அதிகமாக எழுந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இன்று காலை முதல் கடல் நீர் மட்டம் மிகவும் தாழ்வாக இருந்து வருகிறது. எனவே இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடல் நடுவே அமைந்து உள்ள திருவள்ளூர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு சேவையை தற்காலிகமாக ரத்து செய்து, சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

Tags :