Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேவேகவுடாவை ஆதரிப்பதை கர்நாடக காங்கிரசார் எதிர்க்கமாட்டோம்-டி.கே.சிவக்குமார்

தேவேகவுடாவை ஆதரிப்பதை கர்நாடக காங்கிரசார் எதிர்க்கமாட்டோம்-டி.கே.சிவக்குமார்

By: Karunakaran Tue, 09 June 2020 10:59:59 AM

தேவேகவுடாவை ஆதரிப்பதை கர்நாடக காங்கிரசார் எதிர்க்கமாட்டோம்-டி.கே.சிவக்குமார்

கர்நாடக மாநிலங்களவையில் காலியாக உள்ள 4 இடங்களுக்கு வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் 2-ஆம் தேதி தொடங்கியது. இந்த தேர்தலில் பாஜகவிற்கு 2, காங்கிரஸ் கட்சிக்கு 1 என ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்து 4-வது இடத்தில் இடம்பெறும் அளவிற்கு மற்ற கட்சிகளில் பெரும்பான்மை இல்லை.

இந்நிலையில், பெங்களூருவில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பேட்டி அளித்தபோது, எங்கள் கட்சியின் தலைவர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஆலோசித்து, ஒருமித்த கருத்து அடிப்படையில் மல்லிகார்ஜுன கார்கேவை தேர்ந்தெடுத்தோம். அதன்படி எங்கள் கட்சியின் அகில இந்திய தலைமை, மல்லிகார்ஜுன கார்கேவை வேட்பாளராக அறிவித்தது. இதனால் நாடு முழுவதும் உள்ள எங்கள் கட்சியின் தலைவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று கூறினார்.

karnataka,rajya sabha,dk shivakumar,deva gowda ,கர்நாடகா,மாநிலங்களவை, டிகே சிவக்குமார்,தேவ கவுடா

மேலும் அவர், மல்லிகார்ஜுன கார்கேவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்க உதவிய சோனியா காந்திக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தேவேகவுடாவை ஆதரிப்பதை கர்நாடக காங்கிரசார் எதிர்க்கமாட்டோம். சோனியா காந்தி என்ன முடிவு எடுக்கிறாரோ அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம் என்று கூறியுள்ளார் .

பாஜகவை ஆதரிக்கும் பேச்சுக்கு இடமில்லை எனவும், பாஜகவின் உட்கட்சி பிரச்சினையில் தலையிடமாட்டோம் எனவும் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், பாஜக மந்திரிகள் அல்லது நிர்வாகிகளை சந்திக்கக்கூடாது என கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags :