Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கர்நாடகாவில் ஒவ்வொரு மாணவர்களும் தங்களது வீடுகளில் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் ..கர்நாடகா அரசு

கர்நாடகாவில் ஒவ்வொரு மாணவர்களும் தங்களது வீடுகளில் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் ..கர்நாடகா அரசு

By: vaithegi Mon, 04 July 2022 6:43:21 PM

கர்நாடகாவில் ஒவ்வொரு மாணவர்களும் தங்களது வீடுகளில் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் ..கர்நாடகா அரசு

கர்நாடகா: நாட்டின் 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு மத்திய அரசாங்கம் ஹர் கர் திரங்கா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டைக் குறிக்கும் வகையில் வரும் ஆகஸ்ட் மாதம் ஒவ்வொரு மாணவர்களின் வீட்டிலும் தேசிய மூவர்ணக் கொடியை ஏற்றும் பிரச்சாரமாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.

இந்த ஹர் கர் திரங்கா திட்டத்தின் கீழ் சுதந்திர தின விழா நாட்களில் ஒவ்வொரு மாணவர்களும் தங்களது வீடுகளில் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என கர்நாடகா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 17ம் தேதி வரை தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

national flag,karnataka ,தேசியக்கொடி,கர்நாடகா

மத்திய அரசின் ‘ஹர் கர் திரங்கா’ திட்டத்தின் கீழ் தேசிய கொடி ஏற்றப்படுவதை உறுதி செய்யும் வகையில் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும், கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கர்நாடக உயர்கல்வி அமைச்சர் சி என் அஸ்வத் நாராயண் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும், மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் கீழ் வரும் அனைத்து கல்லூரிகள், நிறுவனங்கள் மற்றும் அரசு, அரசின் உதவி பெறும் அல்லது உதவிபெறாத கல்லூரிகள் உட்பட டிப்ளமோ கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் மூவர்ணக்கொடியை ஏற்றி தங்கள் தேசிய பெருமையை வெளிப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், வகுப்புகளின் போது இது குறித்து மாணவர்களுக்கு தெளிவுபடுத்தவும் வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :