Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்திற்கு கர்நாடகா அரசு வருகிற அக்.16 முதல் காவிரி நீர் வழங்க உத்தரவு

தமிழகத்திற்கு கர்நாடகா அரசு வருகிற அக்.16 முதல் காவிரி நீர் வழங்க உத்தரவு

By: vaithegi Thu, 12 Oct 2023 11:12:16 AM

தமிழகத்திற்கு கர்நாடகா அரசு வருகிற அக்.16 முதல் காவிரி நீர் வழங்க உத்தரவு

சென்னை: தமிழகத்திற்கு காவிரி நீரை வழங்குவது தொடர்பாக பல ஆண்டுகளாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்திற்கு கட்டாயமாக கர்நாடகா அணைகளிலிருந்து வினாடிக்கு 5000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டது.

ஆனால், கர்நாடகா அரசு சில நாட்கள் மட்டும் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் தண்ணீர் திறந்து விட்டு கர்நாடகா மாநிலத்திலேயே ஏற்கனவே கடுமையான வறட்சி நிலவுவதால் தமிழகத்திற்கு காவிரி நீரை வழங்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்தது.

cauvery water,government of karnataka ,காவிரி நீர் ,கர்நாடகா அரசு,

மேலும் இது தொடர்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாயிகள் தமிழகத்திற்கு காவிரி நீரை வழங்க முடியாது என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

எனவே இதன் தொடர்ச்சியாக, இன்று காலை தமிழகத்திற்குரிய காவிரி நீரை கட்டாயமாக கர்நாடக அரசு வழங்க வேண்டும் என கர்நாடகா அரசுக்கு எதிராக தமிழகத்தில் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து இதன் முடிவில், காவிரியிலிருந்து வரும் அக்டோபர் 16ஆம் தேதியிலிருந்து 31ம் தேதி வரைக்கும் வினாடிக்கு 3000 கன அடி நீர் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடகா அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்து உள்ளது.

Tags :