Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீரை திறக்க முடியாது .. ஆணையத்தின் உத்தரவிற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு

நீரை திறக்க முடியாது .. ஆணையத்தின் உத்தரவிற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு

By: vaithegi Thu, 12 Oct 2023 4:35:29 PM

நீரை திறக்க முடியாது   ..  ஆணையத்தின் உத்தரவிற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு

சென்னை: தமிழக விவசாயிகள் காவிரி அணையிலிருந்து வரும் நீரை எதிர்பார்த்துவுள்ளனர். இந்த நிலையில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் தர தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கொண்டு வருகிறது. தற்போது 5,000 கன அடி நீர் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு வருகிறது. இந்த நீர் போதியதாக இல்லை என்று விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து தண்ணீர் பற்றாக்குறையால் பயிர்கள் கருகும் நிலையில் இருப்பதாகவும் கவலை தெரிவிக்கின்றனர். அதனால் உரிய நீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து போராடி கொண்டு வருகிறது.

government of karnataka,government of tamil nadu,cauvery , கர்நாடக அரசு ,தமிழக அரசு ,காவிரி


இதையடுத்து இது குறித்து தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்திடம் முறையிட போது, ஆணையம் தமிழகத்திற்கு 5,000 கன அடி நீரை கட்டாயம் திறந்திட வேண்டும் என உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்புகள் வலுத்த நிலையில் பிறகு 3,000 கன அடி நீர் திறக்கப்பட வேண்டும் என தெரிவித்தது.

இந்த நிலையில் கர்நாடக துணை முதலமைச்சர் தமிழகத்துக்கு வினாடிக்கு 3000 கன அடி நீர் திறந்து விட முடியாது என கூறியுள்ளார். மேலும் காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.

Tags :