Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கருணாநிதி நினைவிடம் இந்த தேதி திறக்கப்படும் .. முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவிப்பு

கருணாநிதி நினைவிடம் இந்த தேதி திறக்கப்படும் .. முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவிப்பு

By: vaithegi Thu, 08 June 2023 11:34:20 AM

கருணாநிதி நினைவிடம் இந்த தேதி திறக்கப்படும் ..  முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவிப்பு

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் ஆகஸ்ட் 7-ம் தேதி திறக்கப்படும் ... சென்னையில் நூற்றாண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கூட்டணி கட்சிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், "தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி கால்படாத இடமில்லை; அவர் சந்திக்காத மனிதர்கள் இல்லை; தொடங்காத திட்டம் இல்லை ;உருகாத உடன்பிறப்புகள் இல்லை; இப்படி ஊர் தோறும், நகர்தோறும், கிராமம்தோறும் விழா எடுக்க தொடங்கினால் நூற்றாண்டு விழாவையே பத்தாண்டுகளுக்கு நாம் கொண்டாட வேண்டியது வரும்.

தமிழ்நாட்டு தலைவர்கள் பெயரால் நினைவு சின்னங்களையும் உருவாக்கிய கலைஞர் பெயரால் சின்னங்கள் மாதம் தோறும் திறக்கப்பட இருக்கின்றன. 95 வயது வரை வாழ்ந்த கலைஞர் கருணாநிதி இன்னும் கூடுதலாக ஐந்தாண்டுகள் வாழ்ந்திருப்பாரேயானால் இதோ இந்த மேடையில் நடுநாயகமாக அவரை அமர்ந்திருப்பார்.

chief minister m.k. stalin,karunanidhi memorial ,முதல்வர் மு.க. ஸ்டாலின் ,கருணாநிதி நினைவிடம்

முதுமையின் காரணமாக உடல் நலம் குன்றி அவர் நம்மை விட்டு பிரிந்தார். பிரிந்தார் என்று சொல்வதை விட நான் அடிக்கடி சொல்லி வருவதைப் போல மறைந்து இருந்து நம்மை கண்காணித்து கொண்டிருப்பதாக தான் நான் நினைக்கிறேன். எந்நிகழ்ச்சிகளுக்கு போனாலும் ,எத்திட்டங்களை தீட்டினாலும், எவ்விழாக்களில் பங்கெடுத்தாலும் , எந்நிலைப்பாடுகளை எடுத்தாலும் கலைஞர் என்னை மறைந்திருந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறார் என எண்ணத்தோடுதான் இருக்கிறேன் அதனால் தான் அடிக்கடி கடற்கரைக்கு சென்று அவர் நினைவகத்தை வலம் வந்து கொண்டிருக்கிறேன்.

ஆகஸ்ட் 7-ம் தேதி கலைஞர் கருணாநிதி நினைவிடம் திறக்கப்படவு ள்ளது. 365 நாளும் கலைஞரை கொண்டாட இருக்கிறோம். இக்கொண்டாட்டங்களில் மூலமாக கலைஞர் கருணாநிதிக்கு இதுவரை கிடைக்காத புதிய புகழை சேர்க்க போகிறோம் என்பதல்ல . நம் நன்றியின் அடையாளமாக இதனை கொண்டாட போகிறோம்" என அவர் கூறினார்.

Tags :