Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டோக்கியோ பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்க உள்ள கரூர் மாணவி

டோக்கியோ பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்க உள்ள கரூர் மாணவி

By: Nagaraj Wed, 12 Aug 2020 5:12:21 PM

டோக்கியோ பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்க உள்ள கரூர் மாணவி

தமிழகத்தில் மும்மொழி, இருமொழி கொள்கை விவாதத்திற்கு நடுவே ஜப்பானிய மொழியை கற்று தேர்ந்து உயர் கல்வியை அங்கேயே சென்று படிக்கவுள்ளார் கரூர் மாணவி ஸ்வேதா. அவருக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

கரூர் மாவட்டம் என்எஸ்கே நகரைச் சேர்ந்த ஸ்வேதா சுந்தரராஜன் என்ற மாணவி அங்குள்ள ஸ்ரீ சங்கரா வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் 12 வகுப்பு படித்து முடித்துள்ளார். அம்மாணவி, அதே பள்ளியில் ஐந்தாம் வகுப்பிற்கு பிறகு ஜப்பானிய மொழியை விருப்ப மொழியாக தேர்வு செய்து படித்து வந்துள்ளார்.

அந்த மொழியில் ஏற்பட்ட ஈர்ப்பினால் அதனை முழுமையாக கற்றுக்கொண்டு ஜப்பானிய மொழியிலேயே தனது உயர் கல்வியை படிக்க நினைத்த அவர் ஜப்பானில் உள்ள பிரபலமான டோக்கியோ பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் அறிவியல் படிப்பிற்காக விண்ணப்பித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக பல்கலைக்கழகம் ஆன்லைன் மூலமாக நடத்திய தேர்விலும் வெற்றி பெற்று டோக்கியோ பல்கலை மாணவியாகியுள்ளார்.

karur student,japanese language,mastery,university ,கரூர் மாணவி, ஜப்பான் மொழி, தேர்ச்சி, பல்கலைக்கழகம்

தொடர்ந்து ஸ்வேதாவிற்கு ஆன்லைனில் வகுப்புகள் நடக்கவுள்ளன.
இந்தியாவில் மும்மொழி கொள்கை பாட திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதனை இந்தி பேசாத ஒரு சில மாநிலங்கள் எதிர்த்து வருகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் அரசே அதனை எதிர்த்துள்ளது. அதன் தொடர்ச்சியாக பாஜகவை சாராத காட்சிகள் அனைத்தும் மும்மொழி கல்வி கொள்கைக்கு எதிர்ப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில், மாநிலம் கடந்து , நாடு கடந்து ஒரு மொழியின் மீது காதல் கொண்டு அம்மொழியின் மீதான ஆர்வத்தினால் அந்நாட்டுக்கே சென்று படிக்கவுள்ள ஸ்வேதாவிற்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

Tags :