Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ்நாட்டில் சுட்டெரித்து வந்த அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்றுடன் நிறைவு

தமிழ்நாட்டில் சுட்டெரித்து வந்த அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்றுடன் நிறைவு

By: vaithegi Mon, 29 May 2023 09:22:14 AM

தமிழ்நாட்டில் சுட்டெரித்து வந்த அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்றுடன் நிறைவு

சென்னை: 25 நாட்கள் நீடித்து வந்த அக்னி நட்சத்திரம் இடைவடைவதால் வெப்பம் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது .... அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் கத்திரி வெயில் கடந்த மே 4ம் தேதி தொடங்கியது.

ஆண்டுதோறும் கோடை காலத்தில் கத்திரி வெயில் தொடங்கி 27 நாட்கள் வரை நீடிக்கும். இந்தாண்டு கடந்த மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது. கத்திரி வெயில் காலத்தில் வெயில் அளவு 100 டிகிரி முதல் 108 டிகிரி பாரன்ஹீட் வரை இருந்தது. இதனால் மக்கள் வெளியில் வர முடியாமல் மிக கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

agni nakshatra,kathri veil ,அக்னி நட்சத்திரம் ,கத்திரி வெயில்

அதிலும் குறிப்பாக காலை 11 மணிக்கு மேல் 4 மணிக்குள் வெப்பம் மிகக் கடுமையாக இருந்தது.இச்சூழலில் இன்றுடன் கத்திரி வெயில் முடிவடைவதால் படிப்படியாக வெப்பநிலை குறையும் என்று சொல்லப்படுகிறது.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்ய தொடங்கி இருக்கும் நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை வருகிற 4ம் தேதி அன்று தொடங்கும் என கூறப்படுகிறது. மழையின் தாக்கம் உயரும் என்பதால் கடுமையான வெப்பம் குறைந்து இதமான சூழல் நிலவும் என சொல்லப்படுகிறது.

Tags :