Advertisement

கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் விரிவடைகிறது விசாரணை

By: Nagaraj Sat, 18 July 2020 7:39:25 PM

கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் விரிவடைகிறது விசாரணை

விரிவடையும் விசாரணை... கேரள தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக இதற்கு முன்னர் 13 விமானங்களில் வந்த சரக்குகளை பற்றி விசாரணை நடத்த சுங்க இலாகாவும், என்ஐஏ யும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவற்றில் 3 அல்லது 4 சரக்குகளில் தங்கம் கடத்தப்பட்டிருக்கலாம் என கிடைத்த ரகசிய தகவலை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 40 முதல் 45 கோடி ரூபாய் வரை மதிப்பிலான தங்கம் இந்த வகையில் வந்திருக்கக்கூடும் என கருதப்படுகிறது.

kerala,expanding,investigations,gold smuggling ,கேரளா, விரிவடையும், விசாரணைகள், தங்கக்கடத்தல்

இந்த கடத்தல் தங்கம் வாயிலாக கிடைத்த கோடிக்கணக்கான பணம் ஹவாலா பணமாக துபாய்க்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. தங்க கடத்தல் வழக்கில் 3 ஆவது குற்றவாளியான ஃபைசல் பரீது இந்த ஹவாலா பரிமாற்றத்தின் பின்னணியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கேரளாவை உலுக்கி வரும் இந்த வழக்கின் விசாரணைகள் விரிவடைவதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பும் எழுந்துள்ளது.

Tags :
|