Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொது இடங்களில் குப்பை கொட்டுவோரை மீது புகார் அளித்தால் சன்மானம் ... கேரள அரசு

பொது இடங்களில் குப்பை கொட்டுவோரை மீது புகார் அளித்தால் சன்மானம் ... கேரள அரசு

By: vaithegi Mon, 12 June 2023 11:04:28 AM

பொது இடங்களில் குப்பை கொட்டுவோரை மீது புகார் அளித்தால் சன்மானம்  ...   கேரள அரசு

கேரளா: கேரளாவில் பொது இடங்களில் குப்பை கொட்டுவோரை காட்டிக் கொடுத்தால் 2,500 ரூபாய்சன்மானம் வழங்கப்படும் .... கேரளாவில் குப்பையில்லா மாநிலமாக மற்றும் நடவடிக்கையில், அரசு இறங்கி உள்ளது. பொதுமக்கள் சாலைகள் மற்றும் திறந்த வெளிகளில், அதிகளவில் குப்பைகளைக் கொட்டும் செயல் அதிகரித்துள்ளதால் கேரள அரசு ஒரு புதிய அறிவிப்பை அறிவித்து உள்ளது.

அதாவது பொது இடங்களில் யாராவது குப்பை கொட்டுவதை மக்கள் பார்த்து அவர்கள் மீது புகார் அளித்தால் அவர்களுக்கு அரசு சன்மானமாக ரூ.2,500 வழங்கும் என்று அறிவித்துள்ளது. மாலினிய முக்தம் நவகேரளம என்ற திட்டத்தின் பகுதியாக மாநிலத்தை குப்பையில்லாமல் மாற்ற அரசு இந்த செயலில் இறங்கி உள்ளது.

complaint,award,kerala govt ,புகார் ,சன்மானம்  ,கேரள அரசு


இதையடுத்து இது தொடர்பாக உள்ளாட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலர் சாரதா முரளீதரன் பிறப்பித்த உத்தரவில், பொது இடங்கள், தனியார் இடங்கள் மற்றும் நீர்நிலைகளில் திட மற்றும் திரவக் கழிவுகளை கொட்டுவதை பார்த்தால் மக்கள் புகார் அளிக்கவேண்டும்.

மேலும் இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடும் நபர்களை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கும் நபருக்கு ரூ.2,500 அல்லது விதிக்கப்படும் அபராதத்தில் 25 சதவீதம் வழங்கப்படும் என அறிவித்து உள்ளார். இடம் மற்றும் நேரம் போன்ற விவரங்களுடன் நம்பகமான புகைப்படம் அல்லது வீடியோ கிளிப் உள்ளிட்ட ஆதாரங்களுடன் தெரிவிக்க வேண்டும்.

மக்கள் வாட்ஸ்அப் எண் மற்றும் மின்னஞ்சல் மூலம் புகாரளிக்க வேண்டும் எனவும், தகவல் அளிப்பவரின் பெயர் அல்லது விவரங்களை அதிகாரிகள் வெளியிட மாட்டார்கள் எனவும் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Tags :
|