Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரதமரின் காதலியால் ஏற்பட்ட அதிகாரப் போட்டியில் முக்கிய உதவியாளர் ராஜினாமா

பிரதமரின் காதலியால் ஏற்பட்ட அதிகாரப் போட்டியில் முக்கிய உதவியாளர் ராஜினாமா

By: Karunakaran Fri, 13 Nov 2020 6:36:46 PM

பிரதமரின் காதலியால் ஏற்பட்ட அதிகாரப் போட்டியில் முக்கிய உதவியாளர் ராஜினாமா

பிரதமர் இல்லத்தில் கேரி அணி என்று ஒன்றும், டொமினிக் கம்மிங்ஸ் அணி என்று ஒன்றும் உள்ளது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் நீண்ட கால உதவியாளராக டொமினிக் கம்மிங்ஸ் இருந்தவர். டொமினிக் கம்மிங்ஸ் அணியைச் சேர்ந்த லீ கெயினுக்கு இந்த வாரம் பெரிய பதவி உயர்வு அளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், அதையும் மீறி, லீ திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதற்கு காரணம், பிரதமரின் காதலி கேரியின் எச்சரிக்கையையும் மீறி லீயை அப்பதவியில் பிரதமரின் ஆலோசகரான டொமினிக் அமர்த்தியதால் கேரிக்கு எரிச்சலூட்டியுள்ளது. இதனால், பிரதமர் வீட்டுக்குள் பனிப்போர் ஒன்று புகைந்துகொண்டே இருந்திருக்கிறது.

key aide,resigns,england,boris johnson ,முக்கிய உதவியாளர், ராஜினாமா, இங்கிலாந்து, போரிஸ் ஜான்சன்

இந்நிலையில், பிரதமரின் ஆலோசகர்களால் பிரதமருக்கு சரியான ஆலோசனை அளிக்கப்படவில்லை என கேரி குறை கூறியிருக்கிறார். அத்துடன், ஊடக செயலரான அலெக்ரா ஸ்ட்ராட்டன் என்பவருக்கும் மூத்த உதவியாளரான முனிரா மிர்ஸா என்பவருக்கும் லீயை பதவியில் அமர்த்தியது பிடிக்கவில்லை. இந்நிலையில், ஊடக செயலரான அலெக்ரா, தான் லீயிடம் வேலை செய்ய முடியாது, எதுவானாலும் நேரடியாக பிரதமரிடம் தான் பேசுவேன், அதற்கு சம்மதித்தால் மட்டுமே வேலை செய்வேன் என்று கோர, அதன்படி அவரை கேரி அனுமதித்துள்ளார்.

இது தன்னை அவமதிக்கும் செயல் என்பது போல் உணர்ந்த லீ, பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, இனியும் பிரதமரின் காதலியுடன் எல்லாம் சண்டை போட்டுக்கொண்டு நிம்மதியை இழக்கமுடியாது என முடிவு செய்தார். இதனால் லீ தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துவிட்டார். இன்னும் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், அடுத்ததாக டொமினிக் கம்மிங்ஸ் பிரதமர் இல்லத்திலிருந்து வெளியேற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதனை அவர் மறுத்து உள்ளார்.

Tags :