Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடியில் முக்கிய நபர் சிக்கினார்

ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடியில் முக்கிய நபர் சிக்கினார்

By: Nagaraj Fri, 14 Apr 2023 08:29:51 AM

ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடியில் முக்கிய நபர் சிக்கினார்

சென்னை: ஆருத்ரா கோல்டு ட்ரேடிங் கம்பெனியின் வங்கிக் கணக்குகள் முழுவதையும் கையாண்டது மைக்கேல் ராஜ் தான் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் சுமார் 1749 கோடி ரூபாய் மதிப்புள்ள பணத்தை பணப்பரிவர்த்தனை செய்ததாக விசாரணையில் ஒப்புக் கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை, அமைந்தகரையைத் தலைமையிடமாகக் கொண்ட ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனமானது சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து 2400 கோடி ரூபாய் பணத்தைப் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக புகார் வந்ததை அடுத்து பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் 22 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே இந்த வழக்கின் கீழ் ஆருத்ரா இயக்குநர்களாக இருந்த பாஸ்கர், மோகன் பாபு, செந்தில்குமார், பட்டாபி ராம், கூடுதல் இயக்குநரான மாலதியும் முக்கிய இயக்குநரான ரூஸோ என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு துபாய்க்கு தப்பிச் சென்றிருந்த மைக்கேல் ராஜ் என்பவர் மீண்டும் நாடு திரும்பிய போது விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரை போலீஸார் 7 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்து வருகிறார்கள்.

ஆருத்ரா கோல்டு ட்ரேடிங் கம்பெனியின் வங்கிக் கணக்குகள் முழுவதையும் கையாண்டது மைக்கேல் ராஜ் தான் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் சுமார் 1749 கோடி ரூபாய் மதிப்புள்ள பணத்தை பணப்பரிவர்த்தனை செய்ததாக விசாரணையில் ஒப்புக் கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பணம் எந்தெந்த நபர்களது வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது என்பது குறித்து ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் தொடர்புடைய நபர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
பாஜக நிர்வாகி வக்கீல் அலெக்ஸ் என்பவர் விசாரிக்கப்பட்டுள்ள நிலையில் ராணிப்பேட்டை நிர்வாகி டாக்டர் சுதாகர் என்பவரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் சுதாகர், ஆருத்ரா நிர்வாகிகளான மைக்கேல் ராஜ் மற்றும் ஹரீஷ் ஆகியோரிடமிருந்து பணம் வாங்கியதை ஒப்புக் கொண்டதாக வாக்குமூலம் அளித்திருப்பதாகத் தகவல். பணம் வாங்கியது ஏன் என்பது குறித்துத் தான் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
அத்துடன் இந்த விவகாரத்தில் தொடர்புடையவராகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ஆர்.கே சுரேஷ் மீது ரூஸோ என்பவரிடமிருந்து பணம் பெற்றதாக வழக்கு இருப்பதால் அது தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்டு தொடர்ந்து 15 முறை அழைப்பு விடுத்தும் கூட விசாரணைக்கு ஆஜராகாமல் அவர் வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பதாகத் தகவல் வந்ததை அடுத்து அவரை இந்த விசாரணையில் ஆஜராக வைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவிருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.

arutra,gold trading,bank accounts,inquiry,payment,transaction ,
ஆருத்ரா,  கோல்டு ட்ரேடிங், வங்கிக் கணக்குகள், விசாரணை, பணம், பரிவர்த்தனை

Tags :
|