Advertisement

மெக்சிகோவில் கடத்தப்பட்ட போலீசார் மீட்கப்பட்டனர்

By: Nagaraj Sun, 02 July 2023 9:44:10 PM

மெக்சிகோவில் கடத்தப்பட்ட போலீசார் மீட்கப்பட்டனர்

மெக்சிகோ: மெக்சிகோவில் கடத்தப்பட்ட போலீசார் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

நான்கு நாட்களுக்கு முன்பு, மெக்சிகோவின் சியாபாஸ் மாகாணத்தில் உள்ள ஒகோசோகோல்டா பகுதியில் இருந்து டக்ஸ்ட்லா குட்டிரெஸ் நகருக்கு போலீசார் காரில் சென்றனர்.


16 policemen,idnapping,mexico,rescue, ,கடத்தல், மீட்பு, 16 போலீசார்,  மெக்சிகோ

அப்போது ஆயுதம் ஏந்திய சிலர் அந்த வாகனத்தை மறித்துள்ளனர். பின்னர் துப்பாக்கி முனையில் 16 போலீசாரையும் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து கடத்தப்பட்ட போலீசாரை மீட்கும் பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். இந்த பணி தீவிரமாக நடந்து கொண்டிருந்த போது சியாபசின் நெடுஞ்சாலை அருகே 16 போலீசார் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Tags :
|
|