Advertisement

உடல்நலக் குறைவால் குவைத் மன்னர் காலமானார்

By: Nagaraj Wed, 30 Sept 2020 11:58:04 AM

உடல்நலக் குறைவால் குவைத் மன்னர் காலமானார்

குவைத் மன்னர் அமீர் ஷேக் சபா உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதையடுத்து புதிய மன்னராக ஷேக் நவாப் அல் அகமது சபா அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2006-ம் ஆண்டு முதல் குவைத் மன்னராக அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் இருந்து வந்தார். கடந்த ஜூலை 18-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு ஜூலை 23-ம் தேதி அழைத்து செல்லப்பட்டார். அவரது சிகிச்சை விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், மன்னர் அமீர் ஷேக் சபா நேற்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னர் இறப்பை அடுத்து, குவைத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என துபாய் அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் புதிய மன்னராக ஷேக் நவாப் அல் அகமது சபா அறிவிக்கப்பட்டுள்ளார்.

Tags :