Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

By: vaithegi Thu, 02 Nov 2023 1:53:57 PM

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது  .. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

சென்னை: "நிவாரண முகாம்கள் தயாராக உள்ளன" .... வடகிழக்கு பருவமழை 21.10.2023 அன்று தொடங்கியதில் இருந்து, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில், 01.10.2023 முதல் 01.11.2023 வரை 101.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையளவைக் காட்டிலும் 43 விழுக்காடு குறைவு ஆகும். வடகிழக்கு பருவமழைக் காலத்தில் 01.11.2023 முடிய, 1 மாவட்டத்தில் அதிகமான மழைப்பொழிவும், 32 மாவட்டங்களில் குறைவான மழைப்பொழிவும், 5 மாவட்டங்களில் இயல்பான மழைப்பொழிவும் ஏற்பட்டு உள்ளது.

இதனை அடுத்து இன்று (02.11.2023) காலை 8.30 மணி முடிய 33 மாவட்டங்களில் 8.74 மி.மீ. மழை பெய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக 37.03 மி.மீட்டரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 0.06 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கடந்த 19.09.2023 அன்று ஆய்வுக் கூட்டம் நடத்தி வடகிழக்குப் பருவமழைக்கென மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கினார்கள். மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்கள். தலைமைச் செயலாளர் அவர்கள் 14.09.2023 அன்று அனைத்து துறை அலுவலர்கள், முப்படை மற்றும் ஒன்றிய அரசு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி வடகிழக்கு பருவமழையினை திறம்பட எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அறிவுரை வழங்கினார்.

k. k. s. s. r. ramachandran,precaution,northeast monsoon ,கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்,முன்னெச்சரிக்கை ,வடகிழக்கு பருவமழை

மேலும் வடகிழக்குப் பருவமழை காலத்தில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்திட தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் ஜே.சி.பி. இயந்திரங்கள், மரம் அறுப்பான்கள் உள்ளிட்ட உபகரணங்களுடன், பல்துறை மண்டல குழுக்களையும், மீட்புக் குழுக்களையும், நிவாரண முகாம்களையும் தயார் நிலையில் வைத்திடுமாறும் மாவட்ட ஆட்சியர்களுக்கு 25.09.2023 அன்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

பேரிடர் காலங்களில் தங்குதடையின்றி எரிபொருள் கிடைக்கவும், தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், எண்ணெய் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் கூடுதல் தலைமைச் செயலாளர் வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் அவர்கள் 05.10.2023 அன்று ஆய்வுக் கூட்டம் நடத்தி அறிவுரை வழங்கினார்.

இதையடுத்து 25.10.2023 அன்று பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் அனைத்து மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் அவர்களால் ஆய்வு வழங்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களுக்கும், பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும், கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பல்வேறு வெள்ளத்தணிப்பு பணிகளின் காரணமாக 4399 ஆக இருந்த பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள், தற்போது 3770 ஆக குறைந்துள்ளது. வெள்ளத்தணிப்பு பணிகளுக்காக 2022-23 மற்றும் 2023- 24 ஆண்டுகளில் சென்னை மாநகராட்சி, நகராட்சி நிருவாகம் மற்றும் நீர்வள ஆதாரத் துறை ஆகிய துறைகளுக்கு 819.50 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

Tags :