Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சச்சினின் சாதனையை முறியடித்து புதிய சரித்திரம் படைத்த கே.எல்.ராகுல்

சச்சினின் சாதனையை முறியடித்து புதிய சரித்திரம் படைத்த கே.எல்.ராகுல்

By: Nagaraj Thu, 24 Sept 2020 10:28:25 PM

சச்சினின் சாதனையை முறியடித்து புதிய சரித்திரம் படைத்த கே.எல்.ராகுல்

இன்றைய ஐ.பி.எல். போட்டியில் அதிரடி சதம் அடித்து சச்சினின் சாதனையை முறியடித்து புதிய சரித்திரம் படைத்துள்ளார் கே.எல் ராகுல்.

பெங்களூர் அணிக்கு எதிரான இன்றைய போட்டியின் மூலம் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல் ராகுல் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார். ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.

துபாயில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் கோஹ்லி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான மாயன்க் அகர்வால் 26 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மற்றொரு துவக்க வீரரான கே.எல் ராகுல் தொடர்ந்து அதிரடியாக விளையாடி பஞ்சாப் அணிக்கு ரன்களை குவித்தார். இவர் அதிரடியாக சதம் அடித்தார்.

new history,2000 runs,rahul,sachin ,புதிய சரித்திரம், 2000 ரன்கள், ராகுல், சச்சின்

இந்த போட்டியில் அரைசதம் கடந்ததை அடுத்து கே.எல் ராகுல், இந்த போட்டியின் மூலம் ஐ.பி.எல் தொடரில் தனது 2000 ரன்களையும் பூர்த்தி செய்துள்ளார். இது மட்டுமல்லாமல் 2000 ரன்களை 60 இன்னிங்ஸில் எட்டியுள்ள கே.எல் ராகுல் இதன் மூலம் எட்டு வருடங்களுக்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் 63 இன்னிங்ஸில் 2000 ரன்கள் கடந்திருந்ததை தற்பொழுது முறியடித்து, மிக குறைந்த இன்னிங்ஸில் 2000 ரன்களை கடந்த இந்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

அதே போல் மிக குறைந்த இன்னிங்ஸில் 2000 ரன்களை கடந்த இந்திய வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் கவுதம் கம்பீரும், நான்காவது இடத்தில் சுரேஷ் ரெய்னாவும், ஐந்தாவது இடத்தில் சேவாக்கும் உள்ளனர்.

மிக குறைந்த இன்னிங்ஸில் 2000 ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் (அனைத்து நாட்டு வீரர்கள்) கிரிஸ் கெய்லே (48 இன்னிங்ஸ்) முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. குறைந்த இன்னிங்ஸில் 2000 ரன்கள் கடந்த இந்திய வீரர்கள் பட்டியல்; கே.எல் ராகுல் - 60 இன்னிங்ஸ், சச்சின் டெண்டுல்கர் - 63 இன்னிங்ஸ், கவுதம் கம்பீர் - 68 இன்னிங்ஸ், சுரேஷ் ரெய்னா - 69 இன்னிங்ஸ், விரேந்திர சேவாக் - 70 இன்னிங்ஸ்.

Tags :
|