கனடாவின் சுரங்கப்பாதையில் கத்தி முனையில் கொள்ளை சம்பவம்
By: Nagaraj Mon, 30 Jan 2023 12:13:22 PM
கனடா: கத்தி முனையில் கொள்ளை... கனடாவின் சுரங்கப் பாதையில் கத்தி முனையில் கொள்ளையிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யோர்க்டேல் சுரங்கப் பாதை பஸ் தரிப்பிடத்தில் இவ்வாறு கொள்ளைச் சம்பவம் பதிவாகியுள்ளது. இரண்டு ஆண்கள் கத்தி முனையில் ரீ.ரீ.சீ பஸ் நிலையத்தில் நபர் ஒருவரை கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொள்ளையிடப்பட்ட நபரிடமிருந்து என்ன கொள்ளையிடப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும், இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவருக்கு உடல் ரீதியான காயங்கள் எதுவுமில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சனிக்கிழமை பொதுப் போக்குவரத்து சேவையில் பதிவான இரண்டாவது வன்முறைச் சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பொதுப் போக்குவரத்துச் சேவையில் பயணம் செய்த பயணி ஒருவரை நபர் ஒருவர் தாக்கிய சம்பவம் பதிவாகியிருந்தது.
அண்மைய நாட்களாகவே றொரன்டோவில் பொதுப் போக்குவரத்து சேவைகளில் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தாக்குதல் சம்பவங்களை தடுக்கும் நோக்கில் கூடுதல் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.