Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நோய் எதிர்ப்பு சக்தியுடைய இனிப்பு வகைகளை விற்பனை செய்யும் கொல்கத்தா ஸ்வீட் கடைக்காரர்

நோய் எதிர்ப்பு சக்தியுடைய இனிப்பு வகைகளை விற்பனை செய்யும் கொல்கத்தா ஸ்வீட் கடைக்காரர்

By: Karunakaran Fri, 12 June 2020 12:47:10 PM

நோய் எதிர்ப்பு சக்தியுடைய இனிப்பு வகைகளை விற்பனை செய்யும் கொல்கத்தா ஸ்வீட் கடைக்காரர்

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தற்போது வரை கொரோனா வைரஸு க்கு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனா வைரஸு க்கு மருந்து கண்டுபிடிக்க பல நாடுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து மாத்திரைகள், மற்றும் பிற வைரசை குணப்படுத்தும் மருந்துகளின் கூட்டு மருந்துகள் மூலம் கொரோனா நோயாளிகளை குணப்படுத்தி வருகின்றனர். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்களுக்கு இந்த கொரோனா வைரஸ் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் மற்றும் மூலிகை மருந்துகளை உட்கொள்ள அரசு வலியுறுத்தி வருகிறது.

kolkata,sweet,immune-dense,coronavirus , கொல்கத்தா,இனிப்பு வகை,கொரோனா, நோய் எதிர்ப்பு சக்தி

இந்நிலையில் மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இனிப்பு வகைகளை விற்பனை செய்து வருகிறார். இதனை பலரும் விரும்பி வாங்கி செல்கின்றனர். இதுகுறித்து அவர் கூறுகையில், கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கு நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமே ஒரே வழியாக கருதப்படுகிறது. மருந்து எதுவும் இதுவரை இல்லாத நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் வகையில், 15 வெவ்வேறு மசாலாப் பொருட்களை கலந்து இந்த இனிப்பு வகைகளை தயாரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், ஒவ்வொரு இனிப்பும் 25 ரூபாய் என விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளார். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் இனிப்பு வகைகளை தயார் செய்து விற்பனை செய்வதால் பலரும் இதனை வாங்கி செல்கின்றனர்.

Tags :
|