Advertisement

கோயம்பேடு காய்கறி சந்தை இன்று இயங்காது

By: vaithegi Tue, 17 Jan 2023 09:19:10 AM

கோயம்பேடு காய்கறி சந்தை இன்று இயங்காது

சென்னை: காய்கறி சந்தைக்கு இன்று விடுமுறை ... காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று கோயம்பேடு காய்கறி சந்தைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் 1200-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் இயங்கி கொண்டு வருகின்றன.

இதையடுத்து இந்த சந்தைக்கு திருவள்ளூர்,காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தின் சில பகுதிகளில் இருந்து காய்கறிகள் வருகின்றன.

vegetable market,koyambedu ,காய்கறி சந்தை ,கோயம்பேடு

மேலும் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் அனைவரும் மாட்டுப் பொங்கல் மற்றும் அடுத்த நாள் உழவர் திருநாள் விழா கொண்டாடத்தில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். அதனால், காய்கறிகளை பறித்து அனுப்பும் பணிகள் நடைபெறாது. மேலும், லாரி டிரைவர்களும், சுமை தூக்கும் தொழிலாளர்களும் பொங்கல் விடுறையில் சென்றுவிடுவார்கள்.

எனவே சந்தைக்கு காய்கறிகள் இன்று வராது. இதனை அடுத்து இந்த நிலையில், காய்கறி சந்தைக்கு இன்று விடுமுறை விட முடிவெடுத்து இருப்பதாக கோயம்பேடு காய்கறி அங்காடி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகரன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags :