Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவால் களையிழந்தது கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்கள்

கொரோனாவால் களையிழந்தது கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்கள்

By: Nagaraj Tue, 11 Aug 2020 10:52:29 AM

கொரோனாவால் களையிழந்தது கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்கள்

துள்ளலும், உற்சாகமாகவும் கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி விழா இந்தாண்டு களையிழந்ததது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு விதிமுறைகளும் நடைமுறையில் இருக்கிறது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்த நிலையில் உள்ளனர்.

கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் ’கிருஷ்ண ஜெயந்தி’ விழா இன்று நாடு முழுவதும் உற்சாகமின்றி மக்கள் வீடுகளிலேயே கொண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விஷ்ணுவின் தசாவதாரங்களில் 9-வது அவதாரமான கிருஷ்ணனின் பிறப்பு கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா கிருஷ்ணரின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோவில் உள்பட இந்தியா முழுவதுமே கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்கள் ஆண்டுதோறும் களைகட்டத் தொடங்கி விடும். 3 நாட்கள் வரை இந்த கொண்டாட்டங்கள் நடக்கும்.

krishna jayanti,celebration,houses,disappointment of people ,கிருஷ்ண ஜெயந்தி, கொண்டாட்டம், வீடுகள், மக்கள் ஏமாற்றம்

குஜராத் மாநிலம் சூரத், வட இந்திய மாநிலங்களில் மக்கள் கிருஷ்ண ஜெயந்தியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்வார்கள். கொண்டாட்டங்கள் அந்தந்த மாநில மக்களின் உடை, உணவு உள்ளிட்டவைகளை பிரதிபலிக்கத் தவறியதில்லை. அவர்கள் தங்களுக்கே உரிய பாரம்பரிய நடனங்களுடன் கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடுவர்.

ஆனால் இந்தாண்டு மிக முக்கியமான வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாத நிலை. கொரோனா ஊரடங்கு உட்பட பல்வேறு விதிமுறைகளால் மக்கள் தங்களின் வீடுகளிலேயே கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடுகின்றனர்.

Tags :
|