Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழக தற்காலிக ஆசிரியர்கள் பணி குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியீடு

தமிழக தற்காலிக ஆசிரியர்கள் பணி குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியீடு

By: vaithegi Tue, 05 July 2022 11:45:39 AM

தமிழக தற்காலிக ஆசிரியர்கள் பணி குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியீடு

தமிழகம்:தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை, பள்ளி மேலாண்மைக் குழு மூலம், தொகுப்பூதியத்தில், தற்காலிக அடிப்படையில் நிரப்புமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

இதனால் உயர்நீதிமன்ற உத்தரவு படி ஆசிரியர் நியமனம் தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வி துறை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் 13 ஆயிரம் தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு நேற்று முதல் நாளை மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் .இதற்காக மாவட்ட கல்வி அலுவலர்களிடம் உரிய சான்றிதழ்களுடன் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ சமர்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தற்காலிக ஆசிரியர்கள் பணி குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்,

அதன்படி, பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் 01.06.2022 அன்றைய நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை / பட்டதாரி / முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்படவுள்ளது.

report,temporary editors ,அறிக்கை , தற்காலிக ஆசிரியர்கள்


மேலும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை 04.07.2022 முதல் 06.07.2022 மாலை 5 வரை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திரு.வி.ஜெயசந்திர பானு ரெட்டி , இ.ஆ.ப தெரிவித்துள்ளார்கள்

மாவட்டக் கல்வி அலுவலக முகவரி :
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் , கிருஷ்ணகிரி – [email protected]
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் , மாத்தூர் – [email protected]
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம், முல்லை நகர், ஓசூர் – [email protected]
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகம், தேன்கனிக்கோட்டை – [email protected]

Tags :
|