Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சுரங்கத்தில் இருந்து தொழிலாளர்களை மீட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்

சுரங்கத்தில் இருந்து தொழிலாளர்களை மீட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்

By: Nagaraj Wed, 29 Nov 2023 11:30:57 PM

சுரங்கத்தில் இருந்து தொழிலாளர்களை மீட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்

புதுடில்லி: டில்லி முதல்வர் பாராட்டு... உத்தரகண்ட் சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளா்களை மீட்பதற்காக இரவு பகலாக உழைத்த அனைவரின் முயற்சிக்கும், உழைப்புக்கும் தலைவணங்குகிறேன் என்று டில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதையில் கடந்த நவம்பா் 12-ஆம் தேதி திடீரென் மண் சரிவு ஏற்பட்டது. இதனால், சுரங்கப் பாதைக்குள் 41 தொழிலாளா்கள் கடுமையான இடிபாடுகளுக்குப் பின்னால் சிக்கிக் கொண்டனா். இந்நிலையில், 17 நாள்களாக நடைபெற்ற பல கட்ட போராட்டத்திற்குப் பிறகு செவ்வாய்க்கிழமை மாலை 41 தொழிலாளா்களும் பத்திரமாக மீட்கப்பட்டனா்.

unity,success,appreciation,workers,motivation,principal ,ஒற்றுமை, வெற்றி, பாராட்டு, தொழிலாளர்கள், ஊக்கம, முதல்வர்

இது தொடா்பாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது ‘எக்ஸ்’ தளத்தில் கூறியிருப்பதாவது: உத்தரகண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளா்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனா். தேசிய பேரிடா் மீட்புப் படை, ராணுவம் மற்றும் பலரின் கடின உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது. இந்த செயல்திட்டம் வெற்றியடைய இரவு பகலாக உழைத்த அனைவரின் முயற்சிக்கும், உழைப்புக்கும் நான் தலைவணங்குகிறேன்.

நாட்டு மக்கள் அனைவரின் பிராா்த்தனையும் கைகூடியுள்ளது. பாதகமான சூழ்நிலைகளில் ஒருவரையொருவா் ஆதரித்து, ஊக்கப்படுத்திய அனைத்து தொழிலாளா்களின் பொறுமை மற்றும் தைரியத்திற்கும் நான் தலை வணங்குகிறேன். இது இந்திய மக்களின் ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றி என்று கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

Tags :
|