Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கர்ப்பிணி பெண்ணுக்கு உதவிய கமாண்டோ படைப்பிரிவினருக்கு பாராட்டு

கர்ப்பிணி பெண்ணுக்கு உதவிய கமாண்டோ படைப்பிரிவினருக்கு பாராட்டு

By: Nagaraj Tue, 20 Dec 2022 12:21:40 PM

கர்ப்பிணி பெண்ணுக்கு உதவிய கமாண்டோ படைப்பிரிவினருக்கு பாராட்டு

சத்தீஸ்கர்: பழங்குடி பெண்ணான மாயா என்ற கர்ப்பிணிக்கு திடீரென்று பிரசவவலி ஏற்பட்டது. இதற்கிடையில் சுகாதார மையம் தொலைவில் உள்ளதால் கிராம மக்கள் பொட்கப்பள்ளி முகாமிலுள்ள வீரர்களிடம் உதவி கோரினர். கோப்ரா மருத்துவ அதிகாரி தன் மருத்துவ குழுவினருடன் சம்பவ இடத்துக்கு வந்து அப்பெண்ணுக்கு தேவையான மருத்துவ முதலுதவிகளை வழங்கினார்.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் சரியான சாலை இணைப்பு மற்றும் அடிப்படை மருத்துவ உதவி கிடைப்பதில்லை. இதனால் கமாண்டோ பட்டாலியன் ஃபார் ரெசல்யூட் ஆக்ஷன் (கோப்ரா), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) மற்றும் சிறப்பு அதிரடிப்படை (எஸ்டிஎப்) போன்றோர் அங்குள்ள கிராமத்தில் பாதுகாப்புப்படை முகாமில் தங்கி உள்ளனர்.

இந்த நிலையில் பொட்கப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பழங்குடி பெண்ணான மாயா என்ற கர்ப்பிணிக்கு திடீரென்று பிரசவவலி ஏற்பட்டது. இதற்கிடையில் சுகாதார மையம் தொலைவில் உள்ளதால் கிராம மக்கள் பொட்கப்பள்ளி முகாமிலுள்ள வீரர்களிடம் உதவி கோரினர்.

pregnant,chhattisgarh,national news,defense force ,கர்ப்பிணி, சத்தீஸ்கர், தேசிய செய்திகள், பாதுகாப்புப்படை

இதன் காரணமாக கோப்ரா மருத்துவ அதிகாரி தன் மருத்துவ குழுவினருடன் சம்பவ இடத்துக்கு வந்து அப்பெண்ணுக்கு தேவையான மருத்துவ முதலுதவிகளை வழங்கினார். மேலும் கிராமத்தில் சரியான சாலைகள் இல்லாத காரணத்தால் அப்பெண்ணை வீரர்கள் சிலர் ஒரு கட்டிலில் வைத்து தூக்கி சென்றனர். அதன்பின் ஒரு சிவில் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு, அப்பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அவ்வாறு மருத்துவமனைக்கு சென்றதும் மாயாவுக்கு குழந்தை பிறந்தது. இதனால் மாயா மற்றும் அவரது குடும்பத்தினர் உரிய நேரத்தில் உதவிய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு நன்றி கூறினர்.

Tags :