Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கட்டாய காத்திருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட குத்தாலம் இன்ஸ்பெக்டர்

கட்டாய காத்திருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட குத்தாலம் இன்ஸ்பெக்டர்

By: Nagaraj Wed, 16 Nov 2022 9:33:33 PM

கட்டாய காத்திருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட குத்தாலம் இன்ஸ்பெக்டர்

தென்காசி: தொடர் புகார்கள் வந்ததால் தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் ஆய்வாளர் தாமசை கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி டிஐஜி அதிரடியாக உத்தரவிட்டார்.

குற்றாலத்தில் ஏராளமான மசாஜ் சென்டர்கள் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக செயல்பட்டு வருகின்றன. புகையிலைப் பொருட்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் வியாபாரமும் அதிகளவில் நடைபெறுகிறது என்று காவல்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.

nellie,dig,waiting list,ordered,inspector of police ,நெல்லை, டிஐஜி, காத்திருப்பு பட்டியல், உத்தரவிட்டார், காவல் ஆய்வாளர்

குற்றாலம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் தாமஸ் மீதும் ஏராளமான புகார்கள் சென்ற நிலையில், அவரை கட்டாய காத்திருப்புக்கு பட்டியலுக்கு மாற்றி நெல்லை சரக டிஐஜி உத்தரவிட்டார்.

இந்த அதிரடி உத்தரவு ோலீசார் மத்தியில் கிலியை ஏற்படுத்தி உள்ளது. சுற்றுலாப்பயணிகள் பலரும் மசாஜ் சென்டரால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|