Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷ்யாவிடம் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் அதிக அளவில் கச்சா எண்ணை இறக்குமதி

ரஷ்யாவிடம் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் அதிக அளவில் கச்சா எண்ணை இறக்குமதி

By: Nagaraj Tue, 07 Mar 2023 09:57:21 AM

ரஷ்யாவிடம் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் அதிக அளவில் கச்சா எண்ணை இறக்குமதி

புதுடில்லி: ரஷ்யாவிடம் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் அதிக அளவில் கச்சா எண்ணெயை இந்தியா வாங்கி குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயை கொள்முதல் செய்து வரும் நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் அதிக அளவில் கச்சா எண்ணெயை வாங்கி குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் போர் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதில்லை என முடிவு செய்தன.

low price,russia,ukraine war, ,கச்சா எண்ணெய், கொள்முதல், ரஷ்யா
Continue Reading

இந்நிலையில் ரஷ்யா மலிவு விலையில் கச்சா எண்ணெயை வழங்கி வரும் நிலையில், அந்த கச்சா எண்ணெயை இந்தியா அதிகளவில் கொள்முதல் செய்து வருவதாகவும், இந்தியா தனது 85% கச்சா எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ரஷ்யாவிலிருந்து இந்தியா 16.2 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தது வரலாற்றுச் சிறப்புமிக்கதாகக் கூறப்படுகிறது.

Tags :
|