Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மிகப்பெரிய டைனோசரின் எலும்புக்கூடு சிகாகோவில் காட்சிப்படுத்தல்

மிகப்பெரிய டைனோசரின் எலும்புக்கூடு சிகாகோவில் காட்சிப்படுத்தல்

By: Nagaraj Sat, 03 June 2023 7:51:34 PM

மிகப்பெரிய டைனோசரின் எலும்புக்கூடு சிகாகோவில் காட்சிப்படுத்தல்

சிகாகோ: காட்சிப்படுத்தப்பட்டது... உலகின் மிகப்பெரிய மாமிச உண்ணியான டைனோசரின் எலும்புக்கூடு அமெரிக்காவின் சிகாகோ நகரில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.

ஒன்பதரை கோடி ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் வசித்து வந்த ஸ்பினோஸரஸ் இன டைனோசர், நீர், நிலம் என இரண்டிலும் வாழக்கூடியவை.

dinosaur,skeleton,museum,hangs in the distance ,டைனோஸர், எலும்புக்கூடு, அருங்காட்சியகம், அந்தரத்தில் தொங்குகிறது

சஹாரா பாலைவனத்தில் புதைபடிவ வடிவில் கண்டெடுக்கப்பட்ட ஸ்பினோஸரஸின் எலும்புக்கூடு இத்தாலியில் கட்டமைக்கப்பட்டு தற்போது அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சிகாகோ நகர அருங்காட்சியகத்தில், 46 அடி நீள டைனோஸரின் எலும்புக்கூடு நீச்சலடிப்பது போல் அந்தரத்தில் தொங்கவிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் அதனை ஆர்வமுடன் கண்டு வருகின்றனர்.

Tags :
|