Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொழும்பு பாணந்துறை கடற்கரையில் கரை ஒதுங்கிய மிகப்பெரிய கடல் ஆமை

கொழும்பு பாணந்துறை கடற்கரையில் கரை ஒதுங்கிய மிகப்பெரிய கடல் ஆமை

By: Nagaraj Sun, 04 June 2023 12:38:23 PM

கொழும்பு பாணந்துறை கடற்கரையில் கரை ஒதுங்கிய மிகப்பெரிய கடல் ஆமை

கொழும்பு: கொழும்பு பாணந்துறை கடற்கரையில் உலகின் மிகப்பெரிய கடல் ஆமை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இதை பார்க்க ஏராளமான மக்கள் வந்தனர்.

இலங்கை கடற்பரப்பில் இவ்வாறான ஆமை இனங்களை காண்பது மிகவும் அரிதானது என பாணந்துறை கரையோர காவற்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆமை சுமார் 06 அடி 07 அங்குல நீளம் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார் ஆமை பாதுகாப்பு திட்டத்தின் தலைவர் கடல் ஆமை நிபுணர் துஷான் கபுருசிங்க.

giant turtle,extinct,washed ashore,sri lanka,eggs ,மிகப்பெரிய ஆமை, அழிவு, கரை ஒதுங்கியது, இலங்கை, முட்டை

"உலகின் மிகப்பெரிய ஆமை இனம் அழிவின் விழிம்பை எதிர்கொண்டுள்ளது. வட இந்திய பெருங்கடல் நாடுகளில் இருந்து இலங்கை மற்றும் இந்திய அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் மட்டுமே இவை முட்டையிட வருகின்றன என குறிப்பிட்டார்.

இந்த ஆமையை பார்க்க ஏராளமான மக்கள் அப்பகுதிக்கு வந்து சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :