Advertisement

நாட்டின் கடந்த 24 மணி நேர புதிய கொரோனா நிலவரம்

By: vaithegi Fri, 24 Mar 2023 09:54:01 AM

நாட்டின் கடந்த 24 மணி நேர புதிய கொரோனா நிலவரம்

இந்தியா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68.30 கோடியாக அதிகரித்துள்ளது

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,300 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7,927 ஆக பதிவாகியுள்ளது.

corona,india,treatment,count ,கொரோனா ,இந்தியா,சிகிச்சை ,எண்ணிக்கை

இதனை அடுத்து இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,818 ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,61,922 ஆக பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 220,65,34,827 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 6,117 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
|
|