Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் இன்று கடைசி முழு ஊரடங்கு; வெளியில் சுற்றி திரிந்தால் கடும் நடவடிக்கை

தமிழகத்தில் இன்று கடைசி முழு ஊரடங்கு; வெளியில் சுற்றி திரிந்தால் கடும் நடவடிக்கை

By: Nagaraj Sun, 26 July 2020 10:48:16 AM

தமிழகத்தில் இன்று கடைசி முழு ஊரடங்கு; வெளியில் சுற்றி திரிந்தால் கடும் நடவடிக்கை

தமிழகத்தில் இன்று தான் கடைசி முழு ஊரடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சென்னை உள்பட ஒரு சில மாவட்டங்களில் மட்டும் சமீபத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பின்னர் கடந்த ஜூலை 5 ஆம் தேதியுடன் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இருப்பினும் தமிழகம் முழுவதும் இந்த மாதம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஞாயிறுகளும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் இன்று கடைசி ஞாயிறான 26ம் தேதி முழு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

full curfew,order,last sunday,public anticipation ,முழு ஊரடங்கு, உத்தரவு, கடைசி ஞாயிறு, மக்கள் எதிர்பார்ப்பு

இதனால் பொதுமக்கள் அவசியம் இன்றி வெளியே வரவேண்டாம் என்றும் வெளியே வந்தால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தவிர வேறு எந்த வாகனங்களுக்கும் இன்று அனுமதி இல்லை என்பதால் இன்று பொதுமக்கள் வாகனங்களில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இன்று பால் மற்றும் மருந்து கடைகள் தவிர வேறு எந்த கடைகளையும் திறக்க அனுமதி இல்லை. எனவே கடைகளை யாரும் திறக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜூலை மாதம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று கடைசி ஞாயிறு என்பதால் இன்றுடன் முழு ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் நார்மலான ஊரடங்கு உத்தரவு வரும் 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதால் அதற்கு பின்னரும் ஊரடங்கு உத்தரவு நீடிக்குமா அல்லது ஊரடங்கு என்பது ஒட்டுமொத்தமாக முடிவுக்கு வருமா என்பதை மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Tags :
|