Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எனது வெற்றியை தடுக்கவே தடுப்பூசி குறித்து தாமதமாக அறிவிப்பு - டிரம்ப் குற்றச்சாட்டு

எனது வெற்றியை தடுக்கவே தடுப்பூசி குறித்து தாமதமாக அறிவிப்பு - டிரம்ப் குற்றச்சாட்டு

By: Karunakaran Wed, 11 Nov 2020 4:05:59 PM

எனது வெற்றியை தடுக்கவே தடுப்பூசி குறித்து தாமதமாக அறிவிப்பு - டிரம்ப் குற்றச்சாட்டு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 5 கோடிக்கும் அதிகமானோரை தாக்கியுள்ளது. இதனை ஒழிக்கும் தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் ஏராளமான நிறுவனங்கள் தடுப்பூசியை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

அமெரிக்காவின் பைசர் என்கிற நிறுவனம், ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து உள்ள தடுப்பூசி மனிதர்களிடம் நடத்தப்படும் பரிசோதனையில் 3-ம் கட்டத்தில் உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின்போது குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்காவில் தேர்தலுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் என கூறி வந்தார்.

corona vaccine,success,america election,trump ,கொரோனா தடுப்பூசி, வெற்றி, அமெரிக்கத் தேர்தல், டிரம்ப்

ஆனால் அவர் எண்ணியபடி தேர்தலுக்கு முன்பு கொரோனா தடுப்பூசி தயாராகவில்லை. அதேபோல் தேர்தலிலும் அவர் வெற்றி பெறவில்லை. ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனிடம் அவர் தோல்வியைத் தழுவினார். இந்நிலையில் 3-வது கட்ட பரிசோதனையில் இருந்து கிடைத்த ஆதாரங்கள் தங்கள் தடுப்பூசி கொரோனாவை தடுப்பதில் 90 சதவீதத்துக்கும் மேல் பயனளிக்கிறது என்பதை உறுதி செய்துள்ளதாக பைசர் நிறுவனம் நேற்று முன்தினம் அறிவித்தது.

தற்போது இதுகுறித்து டிரம்ப் தனது டுவிட்டரில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் மற்றும் ஜனநாயக கட்சியினர் தடுப்பூசி மூலமாக நான் வெற்றி பெறுவதை விரும்பவில்லை. அதனால்தான் தேர்தலுக்கு முன்பே வெளியாக வேண்டிய அறிவிப்பு 5 நாட்களுக்கு பிறகு வெளிவந்துள்ளது. எனக்கு பதில் ஜோ பைடன் ஜனாதிபதியாக இருந்திருந்தால் இன்னும் 4 ஆண்டுகள் ஆனாலும் தடுப்பூசி கிடைத்திருக்காது. தேர்தலுக்கு முன்பு அதை அறிவிக்க அவர்களுக்கு தைரியம் இல்லை. அதேபோல் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அரசியல் நோக்கங்களுக்காக அல்லாமல் உயிர்களை காப்பாற்றுவதற்காக இதை முன்னரே அறிவித்திருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

Tags :