Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சோதனைகளை சாதனைகளாக்கியவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி

சோதனைகளை சாதனைகளாக்கியவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி

By: Nagaraj Sat, 03 June 2023 10:04:39 AM

சோதனைகளை சாதனைகளாக்கியவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி

சென்னை: இன்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.

“தென்றலைத் தீண்டியதில்லை. ஆனால், தீயைத் தாண்டி இருக்கிறேன்!” என்பது இது கருணாநிதி ஒரு திரை எழுதிய வசனம்... அதுபோலவே பொதுவாழ்வில் பல்வேறு சோதனைகளை சந்தித்தாலும்... அதை சாதனைகளாக்கி உள்ளார். குடும்ப வாழ்விலும் அப்படி இருந்துள்ளார்.

“எனது வாழ்நாளில் மகிழ்ச்சி, அதிக நேரம் நீடிப்பதில்லை!” இதுவும் அவர் ஒரு மேடையில் முழங்கியதுதான். ‘தமிழகத்தின் ஆட்சிச் சக்கரத்தை ஐந்து முறை பிடித்தவர்’ என்று ஒற்றை வரியில் சொல்லிவிடலாம்.

ஆனால், இந்த அரசியல் பயணத்தில் எத்தனை மேடுகள், பள்ளங்கள், நெளிவு, சுழிவுகள் என்பதைப் பட்டியலிட்டுப் பார்த்தால்... அப்பப்பா... ஒரு தனிமனிதன், இத்தனைச் சோதனைகளையும் தாண்டி சுறுசுறுப்பாக, உற்சாகத்தோடு வாழ முடியும் என்பதற்கு உதாரணமாக கருணாநிதியின் வாழ்க்கையைச் சொல்லலாம்!

எழுத்து, பேச்சு, திரைப்படம், அரசியல், இலக்கியம்... என அவர் தொடாத துறை இல்லை; தொட்டால் துலங்காத துறையும் இல்லை என்பதை, தனது வாழ்க்கை மூலமாக நிரூபித்துக் காட்டியவர் கருணாநிதி. உடல் சோர்ந்தாலும் உள்ளம் சோர்வடையவில்லை. முதுமை தொட்டாலும் மூளை தளரவில்லை என்பது அவரது தன்னம்பிக்கையின் எடுத்துக்காட்டு.

yoga practice,karunanidhi,birthday,breeze never touched,comer ,யோகா பயிற்சி, கருணாநிதி, பிறந்த நாள், தென்றல் தீண்டியதில்லை, வந்தவர்

கருணாநிதி கடந்து வந்த பாதையில் எத்தனையோ மைல் கற்கள். முட்பாதைகள் இருக்கலாம். இதையெல்லாம் தாண்டியும் குடும்பம் என்ற அமைப்பு அவருக்கு பக்கபலமாக இருந்தது என்பதையும் மறுக்க முடியாது.

கருணாநிதி... 3 திருமணங்கள் செய்து கொண்டார். முதல் மனைவி பத்மாவதி, இரண்டாவது மனைவி தயாளு அம்மாள், மூன்றாவது மனைவி ராசாத்தி. இவரது மகன்கள் மு. க. முத்து, மு. க. அழகிரி, மு. க. ஸ்டாலின், மு. க. தமிழரசு, மகள்கள் செல்வி, கனிமொழி. குடும்பம் பக்கபலமாக இருந்தால் எங்கும் சாதிக்கலாம் என்பதும் உண்மைதானே.

இதில் தன் தந்தை போலவே திமுகவின் பல போராட்டங்களில் முக்கிய பங்காற்றியவர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தார் (2007), 2009-ல் தமிழக துணை முதல்வராக இருந்தார். தற்போது முதல்வராக உள்ளார் மு.க.ஸ்டாலின்.

இவரது அண்ணன் மு.க.அழகிரி மத்திய ரசாயன அமைச்சராக இருந்தவர். மகள் கனிமொழி நாடாளுமன்ற மேலவை உறுப்பினர். கருணாநிதி புலால் உணவுகளை உண்பவராக இருந்து பின்னர் சைவ உணவிற்கு மாறினார். ஒரு பக்கம் அரசியல்... மறுபக்கம் எழுத்துப்பணி, மற்றொரு புறம் குடும்பம், மறுபுறம் சமூக தொண்டு என்று ஓய்வறியாது உழைத்தாலும்... யோகாபயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவற்றைத் தவறாமல் கடைப்பிடித்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :