Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காணொலி வாயிலாக குஜராத்திற்கு 3 வளர்ச்சி திட்டங்கள் தொடக்கம்

காணொலி வாயிலாக குஜராத்திற்கு 3 வளர்ச்சி திட்டங்கள் தொடக்கம்

By: Nagaraj Sat, 24 Oct 2020 3:09:57 PM

காணொலி வாயிலாக குஜராத்திற்கு 3 வளர்ச்சி திட்டங்கள் தொடக்கம்

3 வளர்ச்சித் திட்டங்கள் தொடக்கம்... குஜராத் விவசாயிகளுக்கு பகல் நேரத்திலும் பாசனத்துக்கு மின்சாரம் அளிக்க வகை செய்யும் கிசான் சூர்யோதயா யோஜனா திட்டம், கிர்னார் மலைபகுதியில் ரோப் கார் போக்குவரத்து உள்ளிட்ட 3 வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார்.

குஜராத்தில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பாசனத்துக்காக விவசாயிகளுக்கு மின்சாரம் அளிக்கும் கிசான் சூர்யோதயா யோஜனா திட்டத்தை (Kisan Suryodaya Yojana) மாநிலத்தை ஆளும் முதலமைச்சர் விஜய் ரூபானி தலைமையிலான அரசு அண்மையில் அறிவித்திருந்தது. இதற்காக 3,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், மின்வழித்தடத்தை 2023ம் ஆண்டுக்குள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை டெல்லியிலிருந்தபடி பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.

prime minister modi,video,chief minister,projects ,பிரதமர் மோடி, காணொலி, முதலமைச்சர், திட்டங்கள்

குஜராத்தில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் ஜூனாகத் மாவட்டத்திலுள்ள கிர்னார் மலைப்பகுதி மேலே 2 புள்ளி 3 கிலோ மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்ட ரோப் கார் போக்குவரத்து திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

8 பேர் பயணிக்கும் வகையிலான ரோப் காரை முதல்கட்டமாக 25 முதல் 30 எண்ணிக்கையில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 புள்ளி 3 கிலோ மீட்டர் தூரத்தை வெறும் 7 நிமிடத்தில் கடக்க முடிவதோடு, மலைபகுதியின் அழகையும் கண்டுரசிக்க முடியும்.

இதேபோல் அகமதாபாத்தில் உள்ள ஐ.நா.வின் மேத்தா இருதயவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்திலுள்ள குழந்தைகளுக்கான இதய மருத்துவமனையையும் பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி மற்றும் அமைச்சர்கள் காணொலி மூலம் கலந்து கொண்டனர்.

Tags :
|