Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போபாலில் நடந்த நிகழ்ச்சியில் 5 வந்தே பாரத் ரெயில் சேவைகள் தொடக்கம்

போபாலில் நடந்த நிகழ்ச்சியில் 5 வந்தே பாரத் ரெயில் சேவைகள் தொடக்கம்

By: Nagaraj Tue, 27 June 2023 6:50:26 PM

போபாலில் நடந்த நிகழ்ச்சியில் 5 வந்தே பாரத் ரெயில் சேவைகள் தொடக்கம்

போபால்: வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்... போபாலில் உள்ள ராணி கமலாபதி ரெயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 5 வந்தே பாரத் ரெயில் சேவைகளை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

போபால்- ஜபல்பூர், கஜூராஹோ - இந்தூர், கோவா- மும்பை, ஹதியா - பாட்னா, தார்வாட் - பெங்களூரு ஆகிய வழித்தடங்கள் இடையே இயக்கப்படும் அந்த 5 வந்தே பாரத் ரெயில்களின் சேவையை மோடி தொடங்கி வைத்தார்.

minorities,congress,crossroads,pm modi,review ,சிறுபான்மை மக்கள், காங்கிரஸ், குறுக்குவழி, பிரதமர் மோடி, விமர்சனம்

தொடர்ந்து போபால் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, வாக்கு வங்கி அரசியலுக்காக ஏழை மக்களை எதிர்க்கட்சிகள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டினார்.

சிறுபான்மை மக்களை பேச்சால் திருப்திபடுத்தி காங்கிரஸ் செய்யும் குறுக்கு வழி அரசியல் நீண்ட நாட்கள் நீடிக்காது என்றும் அவர் சாடினார்.

Tags :