Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கண்காணிக்க சி.எம்.13 எப்.எஸ் செயலி அறிமுகம்

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கண்காணிக்க சி.எம்.13 எப்.எஸ் செயலி அறிமுகம்

By: vaithegi Tue, 20 Sept 2022 10:15:18 AM

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கண்காணிக்க சி.எம்.13 எப்.எஸ் செயலி அறிமுகம்

சென்னை: கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி மதுரை மாநகரில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கிவைத்தார். இதனை தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

இதனை அடுத்து இந்த நிலையில் காலை உணவு எவ்விததாமதமும் இல்லாமல் குறித்த நேரத்தில் குழந்தைகளுக்கு வழங்கவேண்டும் என முதல்வா் அறிவுறுத்தி உள்ள நிலையில் அதை முறையாக செயல்படுத்த மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளாா்.

cm13 fs,breakfast scheme , சி.எம்.13 எப்.எஸ்,காலை உணவு திட்டம்

‘சி.எம்.13 எப்.எஸ்.' என்ற இந்த செயலி மூலம் அதிகாலையில் சமையல் செய்யத் தொடங்கும் நேரம், முடியும் நேரம், அங்கிருந்து வாகனத்தில் கொண்டு செல்லும் நேரம், பள்ளியில் விநியோகிக்கும் நேரம், குழந்தைகளுக்கு உணவு வழங்கும் நேரம் ஆகியவற்றை இந்த செயலி மூலம் உடனுக்குடன் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் முதல்வரே இதனைக் கண்காணிக்கும் வகையில் இந்த செயலி பயன்பாட்டில் உள்ளது எனவும் எந்த சமையல் கூடத்தில் உணவு விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது? தாமதம் இல்லாமல் சரியான நேரத்தில் உணவு பள்ளிகளுக்கு செல்கிறதா? என்பதை இதன் மூலம் கண்காணிக்க ,முடியும்.

Tags :