Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய மண்டல கிளைகளுக்கு அடிக்கல் நாட்டல்

தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய மண்டல கிளைகளுக்கு அடிக்கல் நாட்டல்

By: Nagaraj Wed, 07 Sept 2022 08:17:52 AM

தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய மண்டல கிளைகளுக்கு அடிக்கல் நாட்டல்

புதுடில்லி: அடிக்கல் நாட்டினார்... ஆந்திரம், கேரளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் (என்சிடிசி) மண்டலக் கிளைகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா அடிக்கல் நாட்டினாா்.

நாட்டில் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பை மேற்கொண்டு வரும் தேசிய நோய்க்கட்பாடு மையத்தின் தலைமையகம் தில்லியில் அமைந்துள்ளது. தற்போது நாட்டில் 8 மாநிலங்களில் இதன் கிளைகள் அமைந்துள்ளன.

ஆந்திரம், கேரளம், அருணாசல பிரதேசம், மகாராஷ்டிரம், திரிபுரா, உத்தர பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் இவ்வமைப்பின் கிளைகளை அமைக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தில்லியிலிருந்து காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: நோய்ப் பரவலை தடுத்தல், கட்டுப்படுத்தல் மற்றும் மேலாண்மையில் நோய்க் கண்காணிப்பு முக்கியப் பங்கு வகிக்கின்றது. இவ்வகையில், என்சிடிசி-யின் மண்டலக் கிளைகள் முக்கியப்பங்கு வகிக்கும். மருத்துவ உள்கட்டமைப்பு பலப்படுத்துவதுவதன் மூலம் நோய் கண்டறிதல், முன்கூட்டிய கண்காணிப்பு மற்றும் நோய் பரவல் கண்காணிப்பின் வாயிலாக முன்கூட்டியே நோய்த் தடுப்பு சாத்தியப்படும்.

laboratory building,inaugurated by the minister,laid the foundation stone,staff ,ஆய்வக கட்டிடம், அமைச்சர், திறந்து வைத்தார், அடிக்கல் நாட்டினார், பணியாளர்கள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாட்டின் மருத்துவ உள்கட்டமைப்பை பலப்படுத்தும் வகையில் செயலாற்றி வருகிறது. பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த ரூ.65,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று பரவலானது, புதிய மற்றும் மீண்டும் தோன்றக் கூடிய தொற்றுநோய்கள் குறித்த கவனத்தை அதிகப்படுத்தியுள்ளது. என்சிடிசி-யின் கிளைகள் மாநில அரசுகளுக்கு உரிய நேரத்தில் நோய் குறித்தான முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு குறித்தான தகவலை வழங்குவதன் மூலம் நோய் தடுப்பில் பெரும் உதவியாக அமையும். வளா்ந்து வரும் தொழில்நுட்பங்கள் உதவியுடன் நிகழ்நேர அடிப்படையில் தகவல் பரிமாற்றம் மூலம் தில்லியில் அமைந்துள்ள என்சிடிசியின் தலைமையகத்துடன் இம்மையங்கள் இணைந்து செயல்படும் என்று அமைச்சா் மண்சுக் மாண்டவியா கூறினாா்.


மேலும், என்சிடிசி-யின் ஆய்வக கட்டடத்தையும், பணியாளா்கள் குடியிருப்பு வளாகத்தையும் அமைச்சா் திறந்துவைத்தாா்.

Tags :