Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 12 மணிநேர வேலை திட்டம் குறித்து தமிழக அரசுக்கு எதிர்கட்சித் தலைவர் கேள்வி

12 மணிநேர வேலை திட்டம் குறித்து தமிழக அரசுக்கு எதிர்கட்சித் தலைவர் கேள்வி

By: Nagaraj Sun, 23 Apr 2023 10:38:25 PM

12 மணிநேர வேலை திட்டம் குறித்து தமிழக அரசுக்கு எதிர்கட்சித் தலைவர் கேள்வி

சென்னை: 12 மணி நேர வேலை திட்டம் குறித்து தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார் எடப்பாடி பழனிசாமி.

12 மணிநேர வேலைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தபோது எதிர்த்த தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு, தற்போது தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றியிருப்பது ஏன் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வினவியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக தொழிலாளர் நலனைக் காக்க அ.தி.மு.க. அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று கூறியுள்ளார்.

edappadi-palaniswami,farmland,protest,question,road, ,எடப்பாடி பழனிசாமி, எதிர்ப்பு, கேள்வி, சாலை, விளைநிலங்கள்

நீட் பிரச்சினை, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, வீட்டு வரி, சொத்து வரிப் பிரச்சினைகளிலும் தி.மு.க. அரசு, தன் பொறுப்பை தட்டிக் கழித்து, மத்திய அரசை கைகாட்டுவதாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

சாலை விரிவாக்கப் பணிகளை ஆரம்பத்தில் எதிர்த்துவிட்டு, இப்போது நிலங்களை கையகப்படுத்துவதாகவும், நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கத்துக்கு விளை நிலங்களைப் பறிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். மக்கள் நலனுக்கு எதிரான எந்த செயல்களையும் பொறுத்துக் கொள்ள முடியாது ((gfxout)) என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tags :
|