Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கேரளா உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி முன்னிலை

கேரளா உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி முன்னிலை

By: Nagaraj Wed, 16 Dec 2020 4:25:55 PM

கேரளா உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி முன்னிலை

இடதுசாரிகள் கூட்டணி முன்னிலை கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகள் கூட்டணி முன்னிலையில் உள்ளன.

கேரளாவில் கடந்த 8, 10, 14ம் தேதிகளில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்ட இந்த தேர்தலில் 76 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

3 கட்டங்களாக நடைபெற்ற இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் அதிகமான இடங்களில் முன்னிலையில் உள்ளன.

left parties,coalition,front,kerala,local body elections ,
இடதுசாரி கட்சிகள், கூட்டணி, முன்னிலை, கேரளா, உள்ளாட்சித் தேர்தல்

பா.ஜ., ஒரு சில இடங்களை தவிர மற்ற இடங்களில் பின்தங்கியுள்ளது. காலை மாநகராட்சியில் மொத்தம் - 6 மார்க்சிஸ்ட் கம்யூ., தலைமையிலான இடதுசாரிகள் கூட்டணி - 4, காங்., கூட்டணி - 2, நகராட்சியில் மொத்தம் - 86 இடதுசாரிகள் கூட்டணி - 36, காங்., கூட்டணி - 40, பா.ஜ., - 3.

இதேபோல் மாவட்ட ஊராட்சிகள் மொத்தம்: 14. இதில் இடதுசாரிகள் கூட்டணி - 10, காங்., கூட்டணி - 4, ஊராட்சி ஒன்றிங்கள்: மொத்தம் - 152, இடதுசாரிகள் கூட்டணி - 98, காங்., கூட்டணி - 53, பா.ஜ., - 1, கிராம ஊராட்சிகள்: மொத்தம் - 941. இதில் இடதுசாரிகள் கூட்டணி - 444, காங்., கூட்டணி - 354, பா.ஜ., - 32. ஒட்டு மொத்தமாக இடதுசாரி கட்சிகள் கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.

Tags :
|
|