Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஊரடங்கு குறித்து வதந்திகளை பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்-உத்தவ் தாக்கரே

ஊரடங்கு குறித்து வதந்திகளை பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்-உத்தவ் தாக்கரே

By: Karunakaran Sat, 13 June 2020 11:47:29 AM

ஊரடங்கு குறித்து வதந்திகளை பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்-உத்தவ் தாக்கரே

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்திய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்தியாவிலே கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.

கொரோனா வைரசால் மகாராஷ்டிரா மாநிலம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைளை மகாராஷ்டிரா அரசு மேற்கொண்டு வருகிறது. கொரோனாவால் வீழ்ச்சி அடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக மகாராஷ்டிராவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. அதன்படி மிஷன் பிகின் அகெய்ன் திட்டத்தின் கீழ் ஊரடங்கு தளர்வுகளை மகாராஷ்டிர அரசு அறிவித்தது.

uddhav thackeray,curfew,maharastra,mumbai,corona rumors ,கொரோனா வதந்தி,உத்தவ் தாக்கரே,ஊரடங்கு,மகாராஷ்டிரா,

இதன்படி மாநிலத்தில் வணிக வளாகங்கள் தவிர அனைத்து சந்தைகள், கடைகள் கடந்த 5-ந் தேதி முதல் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டன. மேலும் 8-ந்தேதி முதல் தனியார் அலுவலகங்கள் 10 சதவீத ஊழியர்களுடன் செயல்படவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா கட்டுக்குள் வராத நிலையில் மாநில அரசு ஊரடங்கு தளர்வுகளை கடுமையாக்க மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ள அறிக்கையில், சில தொலைக்காட்சி செய்தி சேனல்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும், திறக்கப்பட்ட அனைத்து கடைகளும் மூடப்படும் என்று செய்திகள் வெளியிடுகின்றன. ஆனால் அத்தகைய முடிவை அரசாங்கம் எடுக்கவில்லை. இதுபோன்ற செய்திகள் மக்களிடையே குழப்பத்தை உருவாக்குகின்றன. எந்த செய்தியையும் உண்மைதன்மை இல்லாமல் ஒளிபரப்ப கூடாது. வதந்திகளை பரப்பும் செய்திகளை ஒளிபரப்பு செய்வது சட்டப்படி குற்றமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|