Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்கும் சட்டம்... மக்கள் போராட்டம்

நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்கும் சட்டம்... மக்கள் போராட்டம்

By: Nagaraj Wed, 12 July 2023 11:34:30 PM

நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்கும் சட்டம்... மக்கள் போராட்டம்

ஜெருசலேம்: புதிய சட்டம்... இஸ்ரேலில் நீதித்துறைக்கும் அரசுக்கும் இடையிலான அதிகார சமநிலையை மீட்டெடுக்க புதிய சட்டத்தை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். இது நாட்டின் ஜனநாயகத்துக்கு எதிரானது எனக் கூறி லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எனினும், அந்நாட்டு நாடாளுமன்றம் நீதித்துறை சீர்திருத்த சட்டத்தை நிறைவேற்றியது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த சட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் நீதிமன்றங்களின் அதிகாரங்களைக் குறைக்கும் மசோதாவுக்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

bill,court,israel,parliament,powers,ratification, ,அதிகாரங்கள், இஸ்ரேல், ஒப்புதல், நாடாளுமன்றம், நீதிமன்றம், மசோதா

நீதிமன்ற அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் மசோதா இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில் ஒப்புதல் பெற முன்மொழியப்பட்டது. தொடர்ந்து மசோதா மீதான விவாதம் நடந்தது. தொடர்ந்து நடந்த வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 64 வாக்குகள் பதிவாகின. எதிராக 56 வாக்குகள். இறுதியாக மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, நூற்றுக்கணக்கானோர் இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் முன் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நீதிமன்றங்களின் அதிகாரத்தை குறைக்கும் மசோதாவை வாபஸ் பெறக்கோரி போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதால் மக்களின் போராட்டம் மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Tags :
|
|
|
|