Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவை தடுக்க சட்டசபை தொகுதி வாரியாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் - எடியூரப்பா

கொரோனாவை தடுக்க சட்டசபை தொகுதி வாரியாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் - எடியூரப்பா

By: Karunakaran Sat, 27 June 2020 11:10:46 AM

கொரோனாவை தடுக்க சட்டசபை தொகுதி வாரியாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் - எடியூரப்பா

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது அதிகரித்து கொண்டே செல்கிறது. ஓரளவு கொரோனா தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் அங்கு கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

பெங்களூருவில் கொரோனா பாதிப்பு ஒட்டு மொத்தமாக 2 ஆயிரத்தை நெருங்குயுள்ளது. மேலும் கொரோனா காரணமாக 82 பேர் பலியாகியுள்ளனர். பெங்களூருவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கர்நாடக அரசு பெரும் அவதியடைந்துள்ளது. இந்நிலையில் நேற்று பெங்களூரு நகரை சேர்ந்த அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் நடைபெற்றது.

yeddyurappa,karnataka,bengalore,coronavirus , சட்டசபை தொகுதி,எடியூரப்பா,கர்நாடகா,பெங்களூர்,கொரோனா வைரஸ்

இந்த கூட்டத்தில் பேசிய முதல்-மந்திரி எடியூரப்பா, பெங்களூருவில் நேற்று முன்தினம் வரை 1,207 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கொரோனாவை தடுக்க சட்டசபை தொகுதிகளுக்கு தலா ஒரு கண்காணிப்பு அதிகாரி நியமனம் செய்யப்படுவார் என்று கூறினார்.

மேலும் அவர், கொரோனா பரவலை தடுக்க, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும். பெங்களூருவில் ஊரடங்கை மீண்டும் அமல்படுத்தும் திட்டம் இல்லை. கொரோனா தடுப்பு பணிகளுடன் பொருளாதார நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags :