Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • துருக்கி , சிரியாவில் திடீர் நிலநடுக்கம் .. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அனைவரும் ஒன்றிணைவோம் .. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

துருக்கி , சிரியாவில் திடீர் நிலநடுக்கம் .. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அனைவரும் ஒன்றிணைவோம் .. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

By: vaithegi Tue, 07 Feb 2023 2:23:54 PM

துருக்கி , சிரியாவில் திடீர் நிலநடுக்கம்  ..  பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அனைவரும் ஒன்றிணைவோம்  ..  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியா நாட்டு மக்களுக்க்கு உதவ அனைவரும் ஒன்றிணைவோம் ..... துருக்கி நாட்டில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்நிலநடுக்கத்தால் அடுக்குமாடி குடியிருப்புகள் பிற கட்டிடங்கள் இடிந்து விழுந்து. அந்த இடத்தில் இருந்த மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சிலர் இடிந்து விழுந்த கட்டிடங்களில் சிக்கி பலத்த காயத்திற்கும் ஆளாகியுள்ளனர்.

இதனை அடுத்து பலரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டு வருகிறது.நேற்று அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இதனால் அந்த நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். துருக்கியை போலவே சிரியாவிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

prime minister,turkey,syria ,முதலமைச்சர் ,துருக்கி , சிரியா

இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலநடுக்கத்தால் உயிரிழந்த மக்களுக்கு பல நாட்டு தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து கொண்டு வருகின்றனர்.அந்த வகையில் துருக்கி, சிரியா நிலநடுக்கம் பற்றி பேசிய தமிழக முதல்வர் முக ஸ்டாலின் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மிகவும் வருத்தம் அளிக்கிறது.

இதையடுத்து இந்த பேரிடரால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை நினைத்து நான் வேதனைப்படுகிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அனைவரும் ஒன்றிணைவோம் என தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Tags :
|