Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு பற்றி தெரிந்துகொள்வோமா

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு பற்றி தெரிந்துகொள்வோமா

By: vaithegi Wed, 19 July 2023 4:03:17 PM

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு பற்றி தெரிந்துகொள்வோமா

சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதனை அடுத்து நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வருகிற 21.07.2023 முதல் 24.07.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வருகிற 25.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

weather forecast,tamil nadu,puducherry,karaikal , வானிலை முன்னறிவிப்பு , தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால்

அதைத்தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.

மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags :