Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த வருடம் தென்மேற்கு பருவமழை எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்

இந்த வருடம் தென்மேற்கு பருவமழை எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்

By: vaithegi Wed, 12 Apr 2023 3:27:40 PM

இந்த வருடம் தென்மேற்கு பருவமழை எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்

இந்தியா: இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் நீர்த்தேவையை பூர்த்தி செய்யும் தென்மேற்கு பருவமழை எப்படி இருக்கும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் பெய்யும் தென்மேற்கு பருவமழை நாட்டின் நீர்த்தேவையில் பெரும்பான்மை பகுதியை நிறைவேற்றுகிறது. இதையடுத்து இந்த தென்மேற்கு பருவக்காற்றால் அரபிக்கடலோர மாநிலங்கள் தொடங்கி மத்திய மாநிலங்கள் வரை மழை பெறுகிறது.

monsoon,india ,பருவமழை ,இந்தியா

இந்தாண்டு தென்மேற்கு பருவமழை குறித்து தேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் கணிக்கப்பட்டுள்ளதாவது “இந்தியாவில் தென்மேற்கு பருவமழை இயல்பான அளவில் இருக்கும். நீண்ட கால சராசரியான 96 சதவீதமாக இது இருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் ஜூலை மாதத்தில் எல் நினோ நிலைகள் உருவாகலாம் எனவும், இதனால் அக்காலக்கட்டத்தில் அதீத மழை அல்லது குறைவான மழைப்பொழிவு நிகழலாம் எனவும்கணிக்கப்பட்டுள்ளது.

Tags :