Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெள்ளையனே வெளியேறு என்பது போல் அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம் - பிரதமர் மோடி

வெள்ளையனே வெளியேறு என்பது போல் அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம் - பிரதமர் மோடி

By: Karunakaran Sat, 08 Aug 2020 7:07:13 PM

வெள்ளையனே வெளியேறு என்பது போல் அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம் - பிரதமர் மோடி

டெல்லியில் ராஷ்ட்ரிய ஸ்வாசதா கேந்திரா என்ற பெயரில் தேசிய தூய்மை மையம் அமைக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தியின் சத்தியாகிரக நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் தேசிய தூய்மை மையம் அமைக்கப்பட்டுள்ளது. தேசிய தூய்மை மையத்தை இன்று பிரதமர் மோடி துவக்கினார்.

அதன்பின், தூய்மை இந்தியா அனுபவம் குறித்து நாட்டின் பல்வேறு பகுதி மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், வெள்ளையனே வெளியேறு என்று முழக்கமிட்ட நினைவு நாளை முன்னிட்டு, அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம். கிராமம் முதல் நகரம் வரை தூய்மை இந்தியா பற்றி பெரியவர்களுக்கு மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.

lets shout,get out dirty,delhi,prime minister modi ,முழக்கம், அழுக்காக வெளியேறுங்கள், டெல்லி, பிரதமர் மோடி

தூய்மை இந்தியா வெற்றியில் மாணவர்களின் பங்கு கட்டாயம் இருக்க வேண்டும்.2014-க்கு முன்பு இதுபோன்று கொரோனா வைரஸ் தாண்டவம் ஆடியிருந்தால்? நினைத்து பாருங்கள். 60 சதவீதம் மக்கள் வெளிப்புற கழிப்பிடத்தை பயன்படுத்தும்போது நாம் லாக்டவுன் நடைமுறையை எடுத்திருக்க முடியாமா?. தூய்மை இந்தியா திட்டம் கொரோனாவுக்கு எதிராக போராட மிகப்பெரிய பலமாக இருந்ததாக பிரதமர் மோடி கூறினார்.

மேலும் அவர், காந்திஜியால் ஈர்க்கப்பட்ட நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்கள், 'ஸ்வச் பாரத் மிஷன்'னை அவர்களின் வாழ்க்கையின் இலக்காக மாற்றியுள்ளனர். இதற்குக் காரணம் 60 கோடி மக்களுக்கு 60 மாதங்களில் கழிப்பிடம் வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம் என்று கூறினார்.

Tags :
|