Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்திய விவசாயிகள் போராட்டம் குறித்து 7 அமெரிக்க எம்பிக்கள் மைக் பாம்பியோவுக்கு கடிதம்

இந்திய விவசாயிகள் போராட்டம் குறித்து 7 அமெரிக்க எம்பிக்கள் மைக் பாம்பியோவுக்கு கடிதம்

By: Karunakaran Fri, 25 Dec 2020 10:33:30 PM

இந்திய விவசாயிகள் போராட்டம் குறித்து 7 அமெரிக்க எம்பிக்கள் மைக் பாம்பியோவுக்கு கடிதம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி எல்லைப்பகுதிகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று 30-வது நாளை எட்டி உள்ளது. மத்திய அரசு சார்பில் விவசாயிகளுடன் இதுவரை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததையடுத்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு வரும்படி மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

ஆனால், விவசாயிகள் தரப்பில் இதுவரை பேச்சுவார்த்தைக்கான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட அர்த்தமற்ற திருத்தங்களை மீண்டும் கொண்டு வரக்கூடாது என்றும், ஆக்கப்பூர்வமான உறுதியான திட்டங்களை எழுத்துப்பூர்வமாக கொண்டு வரவேண்டும் என்றும் விவசாய சங்கங்கள் வலியுறுத்தி கூறியுள்ளன.

7 us mps,mike pompeo,struggle,indian farmers ,7 அமெரிக்க எம்.பி.க்கள், மைக் பாம்பியோ, போராட்டம், இந்திய விவசாயிகள்

இந்நிலையில், இந்திய விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளி எம்பி பிரமிளா ஜெயபால் உள்ளிட்ட 7 எம்பிக்கள் அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோவுக்கு கடிதம் எழுதி உள்ளனர். அதில், இந்திய வெளியுறவுத்துறை மந்திரியை தொடர்புகொண்டு, விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேசவேண்டும் என கூறியுள்ளனர்.

இந்தியாவில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் உள்நாட்டு விவகாரம் என்பதால் வெளிநாடுகளின் தலைவர்கள், அரசியல்வாதிகள் கருத்து கூறுவது தேவையற்றது என இந்தியா கண்டிப்புடன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக கனடா பிரதமர் கூறிய கருத்துக்கு இந்திய தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

Tags :