Advertisement

4 மாவட்டங்களுக்கு 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

By: vaithegi Mon, 17 Oct 2022 1:38:48 PM

4 மாவட்டங்களுக்கு 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

சென்னை: கடந்த 1 மாதமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து கொண்டு வருகிறது.நேற்று மதுரை, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, அரியலூர்‌, தென்காசி,, திருப்பத்தூர்‌, தருமபுரி, கள்ளக்குறிச்‌சி உள்ளிட்ட 27 மாவட்டங்களில் கனமழை பெய்தது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அக். 20ம் தேதி தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இத்தொடர் மழையால் நீர் நிலைகள் நிரம்பியுள்ளது. முக்கிய அணைகளின் நீர் வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டி வருகிறது.

flood warning ,வெள்ள அபாய எச்சரிக்கை

அதன்படி தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. கேரள மாநிலத்தில் பெய்து வரும் மழையால் பெரியாறு அணை நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வைகை அணை நீர்மட்டம் மீண்டும் படிப்படியாக அதிகரித்து உள்ளது.

இதையடுத்துக்கு இந்நிலையில் தமிழகத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வைகை ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, கடக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என பொதுப்பணித் துறை அறிவுறுத்தியுள்ளது.


Tags :