Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வைகை அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு .. கரையோர மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு .. கரையோர மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

By: vaithegi Wed, 08 Nov 2023 11:44:20 AM

வைகை அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு ..  கரையோர மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதன் காரணமாக தமிழக நீர்நிலைகள் நிரம்பி கொண்டு வருகின்றன. எனவே இதன் காரணமாக நீர்நிலை கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

இதனை அடுத்து தென் தமிழகத்தில் வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாகவும், கேரளா, முல்லை பெரியாறு அணையிலிருந்து நீர் தொடர்ந்து வைகை அணைக்கு திறந்து விடுவதன் காரணமாகவும் வைகை அணையின் நீர்மட்டம் அதிகரித்து கொண்டே வருகிறது.

flood warning,water level of vaigai dam ,வெள்ள அபாய எச்சரிக்கை ,வைகை அணையின் நீர்மட்டம்


வைகை அணையின் மொத்த நீர்மட்டமான 71 அடியில், முன்னதாக 46 அடி நிறைந்து இருந்தது. அது தற்போது 69 அடியாக அதிகரித்துள்ளது. இன்னும் 2 அடியில் வைகை அணையின் முழு கொள்ளளவு அளவை எட்டிவிடும். அதன் பின் வைகை அணையில் இருந்து நீர் முழுதாக திறந்து விடும் நிலை வந்துவிடும்.

எனவே இதனை கருத்தில் கொண்டு, தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் கரையோரத்தில் இருக்கும், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்ட ஊர்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையின் பொதுப்பணித்துறை அதிகாரி வெள்ள அபாய எச்சரிக்கையை 3 முறை எழுப்பி வைகை அணை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

Tags :