Advertisement

எல்.ஐ.சி., நிறுவன பங்குகளை விற்க மத்திய அரசு திட்டம்

By: Nagaraj Tue, 08 Sept 2020 1:08:59 PM

எல்.ஐ.சி., நிறுவன பங்குகளை விற்க மத்திய அரசு திட்டம்

மத்திய அரசு திட்டம்... எல்.ஐ.சி., நிறுவனத்தின் 25 சதவீதம் வரையிலான பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.,யின் பங்குகளை, ஐ..பி.ஒ. முறையில் முதலீட்டாளர்களுக்கு விற்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வருவாய் பற்றாக்குறையை சமாளிக்கும் விதத்தில், எல்.ஐ.சி., ஐ.ஓ.பி.,யின் பங்குகளில், 25 சதவீதம் வரையிலான பங்குகளை விற்க, நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

lic.,shares,revision,cabinet,sale ,எல்ஐசி., பங்குகள், திருத்தம், அமைச்சரவை, விற்பனை

மேலும் சிறு முதலீட்டாளர்கள், எல்.ஐ.சி., ஊழியர்களுக்கு பங்கு விலையில் 10 சதவீதம் தள்ளுபடி அளிக்கவும், போனஸ் பங்குகள் வழங்கவும் திட்டமிட்டு இருப்பதாகவும் தெரியவருகிறது.

இதற்காக எல்.ஐ.சி., சட்டத்தில் திருத்தம் செய்து, அமைச்சரவை ஒப்புதல் பெற்று பின், பார்லி., கூட்டத்தொடரில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags :
|
|