Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மசூதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தியவருக்கு பரோலே இல்லாத ஆயுள் தண்டனை

மசூதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தியவருக்கு பரோலே இல்லாத ஆயுள் தண்டனை

By: Nagaraj Thu, 27 Aug 2020 3:02:41 PM

மசூதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தியவருக்கு பரோலே இல்லாத ஆயுள் தண்டனை

பரோலே இல்லாத ஆயுள் தண்டனை... நியூஸிலாந்தில் இரண்டு மசூதிகளில் 51 பேரைக் கொன்ற தாக்குதல்தாரிக்கு, பரோலே இல்லாத ஆயுள் தண்டனை விதித்து நியூஸிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அவுஸ்ரேலிய தாக்குதல்தாரியான 29 வயதான ப்ரெண்டன் டாரன்ட், மீது 51 கொலை, 40 கொலை முயற்சிகள் மற்றும் ஒரு பயங்கரவாத குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த நீதிபதி கேமரூன் மேண்டர், ‘குற்றவாளி டாரன்டின் குற்றங்கள் மிகவும் கொடூரமானது, ஆயுள் முழுதும் சிறை என்பது கூட அந்த கொலை பாதகங்களுக்கு பிராயச்சித்தமாகாது. உங்களுடைய செயல் மனிதவிரோதமானது, தன் தந்தையின் முழங்காலைக் கட்டிக் கொண்ட 3 வயது குழந்தையைக் கொலை செய்திருக்கின்றீர்கள்’ என கூறினார்.

முன்னதாக குற்றவாளி டாரன்ட் தன் வழக்கறிஞர்களை நீக்கியதோடு விசாரணையில் தான் எதுவும் பேச விரும்பவில்லை என்று கூறியுள்ளதாகத் தெரிகிறது. அதே போல் பரோல் இல்லாத ஆயுள் தண்டனையையும் எதிர்க்கவில்லை. விசாரணையின் போது மெலிந்த தோற்றத்துடன் காணப்பட்ட ப்ரெண்டன் டாரன்ட், முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

new zealand,mosque,shooting,convict,life sentence ,நியூசிலாந்து, மசூதி, துப்பாக்கிச்சூடு, குற்றவாளி, ஆயுள்தண்டனை

தண்டனைக்கான 4 நாட்கள் விசாரணையில், மூன்றாவது மசூதியைக் குறிவைக்கும் திட்டம் இருந்ததாகவும், மசூதிகளை எரிக்கவும், முடிந்தவரை பல பேரைக் கொல்லவும் அவர் விரும்பியதாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு மார்ச் 15ஆம் திகதி கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள மசூதியில் நுழைந்த ப்ரெண்டன் டாரன்ட், மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். பின்னர் லின்வுட் மசூதிக்கு நுழைந்து பலரைக் கொன்றார்.

இந்த தாக்குதல்களை துப்பாக்கி ஏந்திய ப்ரெண்டன் டாரன்ட், சமூகவலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பி பெரும் பரபரப்பபை ஏற்படுத்தினார். இந்த தாக்குதல் உலகெங்கிலும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியது மற்றும் நியூஸிலாந்தை அதன் துப்பாக்கிச் சட்டங்களில் விரைவான மாற்றங்களைச் செய்யத் தூண்டியது.

Tags :
|