Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் இன்று இந்த பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று இந்த பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Wed, 25 Jan 2023 3:02:45 PM

தமிழகத்தில் இன்று இந்த பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் :- பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஓட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

எனவே இதன் காரணமாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 27-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகக்கூடும். அதற்கடுத்த 3 தினங்களில் மேற்கு - வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும்.

rain,chennai meteorological center,low pressure , மழை, சென்னை வானிலை ஆய்வு மையம் ,குறைந்த காற்றழுத்த தாழ்வு

இதனை அடுத்து இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். 26.01.2023 மற்றும் 27.01.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதைத்தொடர்ந்து 28.01.2023 மற்றும் 29.01.2023: தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|